Language

Monday, 2 March 2015

Protection of the Environment: The Need of the Hour

Roshni R.
Ever since the Tsunami, ten years ago, the Government has been planning and implementing major changes relating to Chennai's coast. These projects are often promoted as protecting people against sea, or beautifying the beach. However, while thousands of fishing folk are being relocated, it seems the well-being of alarming amounts of marine life, and of the marine ecosystems in general, are being ignored.
The coast of northern Tamil Nadu is famous for housing Olive Ridley turtle nests.  However, these beaches are becoming increasingly inhabitable for the turtles' eggs. Construction of buildings along the beach line are reducing the nesting area of the turtles. Light pollution alongside the beaches confuses the hatchlings, and they often move landward rather than seaward. On the other hand, banning lights alongside beaches altogether might not be a good solution, as too much darkness might make it difficult to detect and prevent illegal activities.
Illegal poaching and industrial trawlers without TEDs (Turtles Excluder Devices) in their nets also add to the increased deaths of these endangered reptiles. While installing TEDs might help the turtles escape the nets, doing so involves releasing five to ten per cent of the catch back into the ocean, a loss that fishermen find hard to accept. What would be some solutions that could be beneficial for both the turtles and the fishermen?
Every time humans engage in a development project, plenty of people often support or oppose the project for their own personal gain. However, there is hardly anyone to take the side of Mother Nature, to consider what the ill effects our reckless actions might cause to the ecological balance.
தற்போதைய தேவை - சுற்றுசூழல் வளர்ச்சி
இரா. ரோஷ்னி 
சுனாமி பேரலையின் தாக்குதலிற்கு பிறகு அரசாங்கம் கடலோரத்தையும் மீனவ கிராமங்களையும் பாதுகாக்கும் முயற்சியில் செவ்வனே ஈடுபட்டு வருகிறது. இதை நில மதிப்பை உயர்த்துதல் சுனாமியிலிருந்து மக்களை பாதுகாத்தல் மற்றும் கடற்கரையை அழகு படுத்துதல் என்று பல வகைகளில் செய்து வருகிறது. ஒரு புறம் ஆயிரகணக்கான மீனவ குடும்பங்கள் வெளியேற்றப்படும் அதே வேளையில் அதிக அளவில் கடல் வாழ் உயிரினங்கள் புறகணிக்க பட்டு வருகின்றன.

பங்குனி ஆமைகள் என அழைக்கப்படும் ஆலிவ் ரிட்லி என்ற ஆமைகள் முட்டையிடும் முக்கிய பகுதியாக இந்திய கடலோரங்கள் திகழ்ந்துவந்தன. ஆனால் தற்போது இந்திய கடலோரங்களில் கட்டப்படும் கட்டிடங்களால் இந்த ஆமைகள் இங்கு முட்டையிட வருவதை குறைத்து கொண்டுள்ளன. கடற்கரையில் உள்ள தேவையில்லாத வெளிச்சம் இந்த ஆமைகளை குழப்பும் அதே வேளையில் அவை கடல் நோக்கி செல்லாமல் நிலம் நோக்கி வர செய்கின்றன. அதே வேளையில் இந்த ஆமைகளின் முட்டையிடும் காலத்தில் கடலோரங்களில் உள்ள வெளிச்சத்தை கட்டுபடுத்துவது பாதுகாப்பானதா? ஏனெனில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க இந்த இருட்டு ஒரு தடையாக இருக்கலாம்.

இது தவிர வேட்டையாடுதலும், TED எனப்படும் ஆமைகள் மாட்டாமல் தடுக்க கூடிய கருவி பொருத்தப்பட்ட tTRAWLER மீன் பிடி இயந்திரங்கள் பயன்படுத்தாத காரணத்தாலும் இந்த ஆலிவ் ரிட்லி ஆமைகள் அழிந்து வருகின்றன. TED போருத்தபடுவது ஒரு விதத்தில் உதவியாக இருந்தாலும், இது மீனவர்கள் பிடிக்கும் மீன்களில் 5 இல் இருந்து 10 % வரை மீண்டும் கடலில் விட்டு விட செய்கிறது. மீனவர்கள் இந்த நஷ்டத்தை விரும்பவில்லை. ஆமைகளுக்கும் மீனவர்களுக்கும் ஒரே நேரத்தில் பயனளிக்க கூடிய வழி ஏதும் உள்ளதா?

ஒவ்வொரு முறை வளர்ச்சி திட்டங்களில் ஈடுபடும் போதும் சொந்த ஆதாயத்திற்காகவோ பொது ஆதாயத்திற்காகவோ அதை ஆதரித்தும் எதிர்த்தும் பல பேர் கூட தான் செய்கிறார்கள். எனினும் இயற்கை அன்னையின் பக்கம் ஆதரித்து, நாம் மேற்கொள்ளும் பல செயல்களால் சுற்றுசூழல் சமநிலைக்கு ஏற்படுத்தும் விளைவை கண்டுகொள்ள யாரும் இல்லை.

No comments:

Post a Comment